கடலூர்: கடலூரில் காணாமல் போன இளைஞர்கள்  கொன்று புதைக்கப்பட்டு,  சடலமாக மீட்கப்பட்டு உள்ளனார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து  போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் எம். புதூர் மற்றும் டி. புதூர் பகுதியை சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண் ராஜ் அடுத்தடுத்து மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, 2 இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இறுதியில்  கடலூரில் அடுத்தடுத்து இளைஞர்கள்  காணாமல் போனது பரபரப்பை எற்படுத்தியது,  கடலூர் அருகே எம்.புதூர் மற்றும் டி.புதூர் கிராமங்கள் உள்ளது. எம்.புதூர் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவரும் டி.புதூர் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் என்பவரும் காணவில்லை என  அற்புதராஜ் பெற்றோர்களும், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சரண்ராஜ் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில்,  மாயமான இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினார்.  போலீசார் விசாரணையில், அவர்கள் மாயமானதில், அவர்களது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பது வெளியே வந்தது. . அதை தொடர்ந்து நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து அதிரடி   விசாரணை மேற்கொண்ட நிலையில், 2 பேரையும் கொன்று புதைத்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில்,   நெய்வேலி அருகே உள்ள என்.எல்.சி சுரங்கம் உமங்கலம் என்ற பகுதியில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.   அதனை தொடர்ந்து தற்போது புதூர் மாவட்ட காவல் காணப்பணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் தற்போது இருவரின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டது. இதுகுறித்து, கொல்லப்பட்ட இளைஞர்களின் நண்பர்கள்  5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.