மியான்மர் விமானம் அந்தமானில் விபத்தா?

யாங்கூன்

காணாமற்போனதாக கூறப்பட்ட மியான்மர் ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்களும், சில சடலங்களும் அந்தமான் கடலில் காணப் பட்டுள்ளது.

நேற்று பகலில் மியான்மர் ராணுவ விமானம் ஒன்று வானில் பறக்கும் போது ராடார் தொடர்பின் இருந்து விலகிப் போனது.

அதை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த விமானத்தின் சில உடைந்த பாகங்களும், சில சடலங்களும், அந்தமான் கடலில் காணப்பட்டுள்ளது.

இதனால் அந்தமான் அருகே விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இதில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 104 எனவும், விமானப் பணியாளர்கள் மொத்தம் 18 பேர்,எனவும், மொத்தத்தில் 122 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்

இதற்கு முன்பு இந்த விமானம் அந்தமான் தீவில் கண்டுபிடிக்கப் பட்டதாக வேறொரு செய்தி கூறியது.

ஆனால் மேற்கூறிய செய்தியை மியான்மர் ராணுவம் உறுதி செய்துள்ளது

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை


English Summary
missing plane of myanmar crashed in Andaman Sea