சவரக்கத்தி படத்தை இயக்கிய ஆதித்யா தனது அடுத்த பட வேலைகளை தொடங்கி உள்ளார். அடுத்த படத்துக்கு பிதா என பெயரிடப்பட்டுள்ளது. மதி தயாரிக்கிறார். ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 போட்டியில் வென்ற அடுக்ரீதி வாஸ் ஹீரோயினாக நடிக்கி றார். கலையரசன் மற்றும் ரமேஷ் திலக் போன்றவர்கள் நடிக்கிறார்கள். சிறிய பூஜையுடன் படத்தைத் தொடங்குகி றோம்.
படம் பற்றி ஆதித்யா கூறியது:

நான் ஒரு வெப் தொடருக்கான திரைக் கதையை முடித்துவிட்டேன், கதையைப் பற்றி நான் நினைத்தபோது தான். பின்னர், ஊரடங்கு வந்தது. அதில் ஸ்கிரிப்ட்டில் வேலை செய்ய போதுமான நேரம் கிடைத்தது.
எனக்கு மதியை நன்றாகத் தெரியும், பாக்ஸரில் வில்லனாக நடிக்கிறார். தந்தை யாக நடிக்க புதிய முகத்தை தேடிக் கொண்டிருந்தேன். அதற்கு பொருத்தமாக இருந்ததால் அந்த பாத்திரத்தை செய்யும் படி கேட்டேன். படம் ஒரு தந்தை மற்றும் அவரது மகள் பற்றியது, அவளைக் கண்டு பிடிக்க அவர் எடுக்கும் பயணம். அவர் இழப்புகளை எதிர்கொள்கிறார், அவளைக் கண்டுபிடிக்க பல போராட்டங்கள் நடத்து கிறார். இவ்வாறுஒரு உணர்ர்சி போராட்ட கதையாக உருவாக உள்ளது,
இவ்வாறு ஆதித்யா கூறினார்.
Patrikai.com official YouTube Channel