ஆண்டுதோறும் இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் கலந்துகொள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘மிஸ் இந்தியா’ அழகி போட்டிகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான மானசா வாரணாசிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் மகுடம் சூட்டினார்.
மானசா ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் படிப்பை முடித்த இவர், நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கல்வி பயிலும் காலம் முதல் மாடலிங் துறையில் செயல்பட்டு வந்தவர் மானசா.