லக்னோ:

2016ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்துகொண்ட உ.பி. மாநிலம் லக்னோவை சேர்ந்த பங்குரி கித்வானி நடந்து முடிந்த ஐஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் 97.25 சதவீதி மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

லக்னோவில் உள்ள லா மார்டினியர் பெண்கள் கல்லூரியில் பயின்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தவில் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் தற்போது ஐஎஸ்சி தேர்வு மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதினார். இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தான் பிளஸ் 2 தேர்வில் 97.25 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,‘‘நான் 97.25 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பதை எனது நண்பர்ளுக்கும், என்னை பின் தொடர்பவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலந்துகொள்ள முடியாமல் போனது. மிஸ் இந்தியா வெற்றிக்கு பிறகு உலக அழகி போட்டிக்கு பயிற்சி பெற வேண்டியிருந்தது. இதில் 80 நாட்டு அழகிகள் கலந்துகொண்டனர். இதில் எனக்கு 25வது இடம் கிடைத்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பதிவில், ‘‘ஒரு ஆண்டு எனது அழகு பணியை மூட்டை கட்டிவைத்துவிட்டு முழு அளவில் ஈடுபாட்டுடன் பயின்றேன். அதனால் தான் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

லா மார்டினியர் கல்லூரி முதல்வர் கூறுகையில்,‘‘அழகி போட்டியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் அவர் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்துள்ளார். இது அவரது மாடலிங் தொழிலுக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.

கித்வானி தந்தை தீபக் கூறுகையில்,‘‘இந்த பயணம் எனது மகளுக்கு பரபரப்பான பயணமாக அமைந்தது. மாடலிங்கையும், கல்வியையும் அவர் சம நிலையில் கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது’’ என்றார்.
பான்குரி வரலாற்று பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கலை பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும் அல்லது மாஸ் மீடியாவில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர அவர் திட்டமிட்டுள்ளார்.