நடிகை டாப்ஸி நடிப்பில் உருவான ஹஸீன் தில்ரூபா திரைப்படம் கடந்த ஜூலை 2ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.

இந்நிலையில் டாப்ஸி நடிக்கும் அடுத்த புதிய திரைப்படம் குறித்த தகவல் இன்று வெளியானது.

மேட்னி என்டர்டெயின்மென்ட் சார்பில் நிரஞ்சன் ரெட்டி மற்றும் அபினேஷ் ரெட்டி இணைந்து தயாரிக்கும் மிஷன் இம்பாசிபிள் எனும் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரபல இயக்குனர் ஸ்வரூப்.R.S.J. எழுதி இயக்கியுள்ள மிஷன் இம்பாஸிபிள் திரைப்படத்திற்கு மார்க்.K.ராபின் இசையமைக்கிறார்.