லாகூர்: பாகிஸ்தானிலுள்ள பயன்படுத்தப்படாத இந்து கோயில்கள் மற்றும் சீக்கிய குருத்வாராக்களை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளை அந்நாட்டு அரசு துவக்கவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில், சிறுபான்மையினருக்கான மத உரிமைகள் மறுக்கப்படுவதாக எழுந்துவரும் விமர்சனங்களையடுத்து, இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய கணக்குப்படி, பாகிஸ்தானிலுள்ள இந்து கோயில்கள் மற்றும் சீக்கிய குருத்வாராக்களின் மொத்த எண்ணிக்கை 1830. ஆனால், அவற்றில் வெறும் 31 மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.
எனவேதான், எஞ்சியவற்றையும் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ETPB எனப்படும் வெளியேற்றப்பட்டோர் அறக்கட்டளை சொத்து வாரியம், பிராந்திய அரசாங்கங்கள் போன்றவை, தங்களின் சீக்கிய மற்றும் இந்து உறுப்பினர்களுடன் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.