யநாடு

த்திய அமைச்சர் சுரேஷ் கோபி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார். பிறகு முண்டகை, சூரல் மலையில் பாதிப்புகளை ஆய்வு செய்த சுரேஷ் கோபி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சுரேஷ் கோபி செய்தியாலர்களிடம்,

“வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே பிரதான பணி. மாயமானவர்கள் தொடர்பான விபரங்கள் சரியாக இன்னும் கிடைக்கவில்லை. தேடுதல், மீட்பு பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவை என கேரள அரசு கேட்டால், மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.