தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த அமைச்சர் மகன்..

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அவ்வப்போது வெளியாகும் தகவல்கள்  புயலை உருவாக்கி வருகின்றன.

இந்த வழக்கில் கைதான ஸ்வப்னா, பிரதான குற்றவாளியாகச்  சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு மட்டங்களில் இருந்த தொடர்புகள் அங்குள்ள அரசியல் வாதிகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாகக் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல், இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் இப்போது கேரள தொழில் துறை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் மகன் பெயர் அடிபடத்தொடங்கியுள்ளது.

அமைச்சர் மகன் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி  வருகிறது.

அமீரகத்துக்குச் செல்ல விசா கிடைப்பதற்கு அமைச்சர் மகனுக்கு ஸ்வப்னா உதவி செய்துள்ளார்.

அதற்கு நன்றிக் கடனாக அமைச்சர் மகன் பிரபல ஓட்டலில், ஸ்வப்னாவுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு அளித்த விருந்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விரைவில் அமைச்சர் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, இது குறித்து விசாரிக்கும் எனத் தெரிகிறது.

-பா.பாரதி.