சென்னை: அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட உள்ள அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடுக்கான லோகோவை (இலட்சினை) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் வெளியிட்டார். இந்த மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில், ‘தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆம் ஆண்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்ட https://muthamizhmuruganmaanadu2024.com இணையதளம் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
இம்மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர். ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
அறுபடை வீடுகளின் அரங்கங்கள், சிறப்புப் புகைப்பட கண்காட்சி. வேல்கோட்டம், 3D நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், ஆன்மிக கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்ற அம்சங்களுடன் இம்மாநாடு வரவமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர் பாபு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) இன்று வெரியிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, “தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகனுக்கு பல்வேறு சிறப்புகளை செய்து வருகின்ற ஆட்சி திராவிட மாடலாச்சு என்றால் மிகையாகாது. அந்த வகையில் திருச்செந்தூரில் 300 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக அந்த திருப்பணிகள் முடிவுற்ற குடமுழுக்கு நடக்க உள்ளது.
இதேபோல் பழனியில் இந்து சமய அறநிலைத்துறையின் நீர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அனைத்து உலாக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவது என்று தீர்மானித்து அந்த நிகழ்வை அடுத்த மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதி நடத்த உள்ளோம். இதன் தொடர்ச்சியாக என்னுடைய தலைமையில் 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவும் ஒவ்வொரு துறையின் சார்ந்தவர்களின் 11 குழுக்களும் பல்வேறு வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து உலக முத்தமிழ் முருகர் பக்தர் மாநாடு அறிவித்துள்ளது. இதுவரை 10 கூட்டமா நடத்தியுள்ளோம்.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டவர்கள் 37 பேர் கலந்துகொள்ள அணுகி உள்ளார்கள். இந்த நிகழ்வு என்பது இதுவரையில் தமிழகத்தில் ஆன்மீக வரலாற்றில் முதல்முறையாக பல்லாயிரம் பக்தர்கள் பங்குபெறுகின்ற ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு மாநாடாக இருக்கும் மாநாட்டில் ஒரு மலர் ஒரு ஆய்வு கட்டுரை புத்தகமாக வெளியிட உள்ளோம். மேலும் நவீனம் 3D காட்சிகளோடு ஆறுபடை வீடு முருகனை அருகில் சென்று பார்ப்பது போல் தயாரித்து உள்ளோம். இயக்குனர் பா.விஜய், முருகன் மாநாட்டிற்கு ஒரு அழகான பாடலை அமைத்து வருகிறார்.
ஆன்மீக வரலாற்றில் முதல்முறை… அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு – எங்கே? எப்போது? – அமைச்சர் சேகர்பாபு !
மலேசியா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து மாநாட்டில் பங்கேற்க அணுகி உள்ளார்கள். மேலைநாட்டை சேர்ந்த அறிஞர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரக்கூடியவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. பழனி முருகனைப் பொறுத்தவரை பணத்திற்கும் நன்கொடைக்கும் பஞ்சமில்லை நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அரசு ஒரு கணிசமான தொகையை தருகிறது அதை விரைவில் அறிவிப்போம்,
புதிதாக தொடங்கப்பட்ட கற்பகாம்பாள் கல்லூரியில் 750 பேர் சேர்ந்துள்ளர். அதில் 100 கும் மேற்பட்ட இருக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை சார்பாக இருக்க கூடிய பள்ளி கல்லூரிகளுக்கு 24,500 பேர் பயன்பட்டு வருகிறார்கள். அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு பழனியில் உள்ளூர் விடுமுறை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் 74 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்” என்றார்.