சென்னை: சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு என திருச்சியில் நடைபெற்ற சமக்கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், செந்தில் பாலாஜி 10 வருஷம் ஜெயிலுக்கு போவாரு என்றும் கூறினார்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் திருச்சியில் நேற்று (மார்ச் 23) பொதுக்கூட்டம் நடைபெற்றது. சமக்கல்வி கொள்ளை விளக்க பொதுக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், பொன்னார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் டாஸ்மாக் உள்பட பல்வேறு திமுக அரசின் ஊழல்களை குறித்து பேசியவர், டாஸ்மாக் ஊழல் வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறைக்கு செல்வார், 10 ஆண்டு சிறைவாசம் அனுபவிப்பார்எ ன்று கூறினார்.
அண்ணாமலையின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.