சென்னை

மிழக அமைச்சர் கே என் நேரு மக்கள் தொகை அதிகமுள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்துளார்.

இன்று தமிழக சட்டப்பேரவைகேள்வி நேரத்தில், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறம் அமைச்சர் கே என் நேரு பதில் அளித்தார்

அமைச்சர் கே.என்.நேரு,

”அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், மக்கள்தொகை மற்றும் வருவாய் அடிப்படையில், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் நாளை மறுநாள் கொண்டு வரப்படும்

ஆனால் மாநகராட்சிகளை வருவாய் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும். இந்த சட்ட திருத்தத்தின் மூலம், மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக இருந்தாலும், தேவை ஏற்பட்டால் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தலாம்”

என்று தெரிவித்துள்ளார்.