டெல்லி

த்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழக சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 5000 கோடி ஒதுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று மாநிலங்களவை கேள்வி நேரத்தில் திமுக எம்.பி ராஜேஷ்குமார்,

”2023 மற்றும் 2024 ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.657.53 கோடி  தமிழகத்துக்கு போதுமான நிதி இல்லை. ஆகவே, தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் ரூ.2000 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எந்த குறையும், காலதாமதமும் இல்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும்”

என்று தெரிவித்தார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்ச்சர் நிதின் கட்கரி,

“தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்குவதில் நாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை. இரண்டாயிரம் கோடி ரூபாய் அல்ல, ரூ.5 ஆயிரம் கோடியை கூட ஒதுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஏற்கெனவே இதுகுறித்து நாங்கள் பல்வேறு முடிவுகளையும் மேற்கொண்டு உள்ளோம்.

இருப்பினும் இதுதொடர்பாக நீங்கள் அதற்கான பரிந்துரையையும் , நிலம் கையகப்படுத்துதலையும் உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் மேற்கொள்ளும்.”

என்று பதிலளித்துள்ளார்.