சென்னை

மிழக போக்குவரத்துக் கழகம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.

இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில்,

”திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காகத் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாகச் சிறப்புப் பேருந்துகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2,700 சிறப்புப் பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியமும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.