துரை

துரை கப்பலூர் சுங்கச் சாவடியில் உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என தமிழக அமைச்சர் மூர்த்தி கூறி உள்ளார்.

இன்று மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நட்ந்த்ஹ முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம்,

”மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் பழைய நடைமுறைபடி உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை. சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. தூர சுற்றுவட்டார பகுதி மக்கள், ஆதார் அட்டை கொண்டு வந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது.

2020ம் ஆண்டைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியில் செல்லலாம். உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது.

மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளோம். உள்ளூர் முகவரி உள்ள மக்களுக்கு கட்டண விலக்கு தொடரும்.”

என்று தெரிவித்துள்ளார்.