சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல்நாள் அமர்வில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யப்போகும் இரண்டாவது பட்ஜெட் என்பதுடன், 2வது காகிதமில்லா இ-பட்ஜெட் என்ற பெருமையையும் பெறுகிறது.
கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நிதி அமைச்சர் பழனிவேல் ராஜனால் முதன்முறையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் நடைபெற்றது. அப்போது ஏராளமான சலுகைகளை முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில், 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் நாளை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து, ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை அரங்கில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாகவும், கணினி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி (நாளை) 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி (நாளை மறுநாள்) தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது.
நாளை அமர்வில், நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படுவதுடன், மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும் முடிவெடுத்து, சபாநாயகர் அறிவிப்பார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதன்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 2வது முறையாக நாளை முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.