சூரிய மின் உற்பத்திக்கு நிலம் வாங்கியதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 750 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மேற்கு தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் “அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 50 வீடுகளுக்கு 2 பேர் என நியமித்துள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்று புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின் உற்பத்திக்கு நிலம் வாங்கியதில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 750 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இது குறித்து தன் மீது அவதூறு வழக்கு போட்டாலும் அதை சந்திக்க தயார்” என்று வைகோ பேசினார்.