சென்னை: தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகிகள் திருவுருவப் ப படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஆண்டுதோறும் ஜூலை 17ந்தேதி தியாகிகள் தினம் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிண்டி காந்தி மண்பத்தில் உள்ள தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்ற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.