திருநெல்வேலி

மிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று திருநெல்வேலியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம்,

“ஒவ்வொரு கட்சியினரும் அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பணிகளாக மேற்கொள்வார்கள். திமுகவை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த முகத்திரமும் இல்லை. திமுக கூட்டணி தான் வலுவாக உள்ளது. அதிமுகவின் கூட்டணி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணி ஆட்சியா தனி ஆட்சியா என்பதே அவர்கள் கூட்டணியில் பெரும் பிரச்னையாக உள்ளது.  அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரச்னையில் உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார், திமுக களத்தில் உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவை நீக்குவோம் என சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அதிமுக – பாஜக கூட்டணி சரியாக இல்லை.

எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் வெற்றி பெற வேண்டுமே, நாங்கள்தான் வெற்றி பெறுவோம், தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒருபோதும் திமுகவுடன் கூட்டணி இல்லை என விஜய் பேசி உள்ளார்  ஆனால் தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் கூப்பிடவே இல்லையே”

எனக் கூறியுள்ளார்.