சென்னை:

மிழகத்தில் வன்முறையை தூண்ட நினைத்தால் எச்.ராஜாவுக்கு சிறை உறுதி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பெரியார் சிலை உடைக்கப்படும் என சர்ச்சையை ஏற்படுத்திய ராஜா, அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழும்பியதை தொடர்ந்து, வருத்தம் தெரிவித்த நிலையில், தமிழை சனியன் என்று பெரியார் கூறியதாக பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழை சனியன் என்று பெரியார் சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். மேலும்,
தமிழை கொச்சைப்படுத்தி வன்முறையை தூண்ட நினைத்தால் எச்.ராஜா சிறையில் அடைக்கப்படுவது உறுதி என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், திருச்சி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கும் போது,  யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் பதில் சொல்லியாக வேண்டும் என்றும் கூறினார்.