திருவண்ணாமலை
தமிழக அமைச்சர் எ வ வேலுவின்மகன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
எ.வ.வேலு தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பணி புரிவதுடன் தி.மு.க. தலைமையின் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். அமைச்சர் எ வ வேலுவின் மகன் பெயர் எ.வ.வே. கம்பன்.
இன்று எ.வ.வே. கம்பன் திருவண்ணாமலையின் ஏந்தல் பைபாஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அவர் திருவண்ணாமலை – வேட்டவலம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கம்பன் பயணித்த கார் மற்றொரு கார் மீது வேகமாக மோதியது.
விபத்தில் கம்பன், கார் டிரைவர், உதவியாளர், மற்றொரு காரில் பயணித்த இருவர் என மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.