சென்னை: தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்னைஉயில் உள்ள தனியார் மருத்துவமனை அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்தோ, அரசு தரப்பில் இருந்தோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Patrikai.com official YouTube Channel