சென்னை: தமிழக சட்டப்பேரவையில் புதிய ரேஷன் அட்டைகள் குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய உணவுபொருள் துறை அமைச்சர் சங்கரபாணி அதுதொடர்பான விளக்கத்தை பதிவு செய்தார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு உணவு பொருள் வழங்கல்தறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார்.
‘தமிழகத்தில் ரேஷன் கடைகளில் எத்தனை புகார்கள் வந்திருக்கின்றன? அதேபோல எத்தனை ரேஷன் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன?’ என எம்எல்ஏ ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும், ஏற்கெனவே ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் தொலைபேசி புகார் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
திமுக ஆட்சியில் புதிதாக 3,000- க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. t திமுக ஆட்சி அமைந்தவுடன் 18,09,677 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தமாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 224 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.
புதிய ரேசன் அட்டைக்காக, 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு புதிய அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய குடும்ப அட்டை பெற 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. அதுவும் விரைவாக பரிசீலனை செய்து வழங்கப்படும்”
இவ்வாறு கூறினார்.