பெங்களூரு

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு-ஓசூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை விளக்கம் அளித்தது. பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார். அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.