டெல்லி: பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவில் வறண்ட காற்றின் தாக்கம் காரணமாக பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களில் குளிர்ந்த அலை அல்லது கடுமையான குளிர் அலை வீசக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதன் காரணமாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவுப் பகுதிகளில் மிதமான இடியுடன் கூடிய மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அகில இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.