புதுடெல்லி: அஞ்சல்துறை சேமிப்புக் கணக்குகளில் இனிவரும் நாட்களில் ரூ.500 குறைந்தபட்ச இருப்புத்தொகை இருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய விதிமுறையின்படி, அஞ்சல் சேமிப்புக் கணக்கில் ரூ.50 குறைந்தபட்ச இருப்புத்தொகை இருந்தால் போதுமானது. ஆனால், வங்கிகளில் நிலைமை அப்படியானது இல்லை.

அஞ்சலகங்களில் நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கைத் துவங்கி பயன்படுத்தி வருகின்றன. இதற்கு குறைந்தபட்ச இருப்புத்தொக‍ையும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

ஆனால், இப்போது திடீரென அஞ்சலக சேமிப்புக் கணக்கில் ரூ.500 குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டுமென மத்திய அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த இருப்பு குறையும்பட்சத்தில் ஆண்டிற்கு ரூ.100 சேவை கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அதேசமயம், அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க ஓராண்டு காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், அவகாசம் அளிக்கப்பட்ட ஓராண்டிற்கு பின்னரும் குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்றால், அந்த கணக்கு காலாவதியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]