கராச்சி
பாகிஸ்தானில் பாலின் விலை பெட்ரோலை விட அதிகரித்து லிட்டர் ரூ.140க்கு விற்கப்படுகிறது
பாகிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் நிலவி வருகிறது. அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது இஸ்லாமிய பண்டிகையான மொகரம் கொண்டாடப்பட்டு வருகிறது. மொகரத்தின் போது இஸ்லாமியர்கள் தங்களை உடல் வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வார்கள்.
அப்போது அவர்களுக்கு பால், பழரசம் போன்றவற்றை அளிப்பார்கள். பாகிஸ்தானில் தற்போது பால் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த பண்டிகையும் சேர்ந்துக் கொண்டதால் பாலின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பாலின் விலை ரூ.140 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை ரூ. 91 ஆகவும் டிசல் விலை ரூ.. 113 ஆகவும் உள்ளது. பெட்ரோலை விடப் பாலின் விலை அதிகரித்துள்ளதால் பாகிஸ்தான் மக்கள் கடும் துயர் அடைந்துள்ளனர். மேலும் பால் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய ஆணையர் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.