பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து அங்கு இதுவரை 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ராணுவத்தின் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திரிபுரா வந்துள்ள ஷேக் ஹசீனா பாதுகாப்புடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இடைக்கால அரசை அமைக்க பங்களாதேஷ் ஜனாதிபதியிடம் ராணுவம் உரிமை கோர உள்ளது.
தேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்ள இருப்பதாகவும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் நிறைவேற்றும் என்றும் ராணுவத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமா அறிவித்துள்ளார்.
அண்டை நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா இதனை கூர்ந்து கவனித்து வருகிறது.
பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…