பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தில் சர்வதேச குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமான மைக் டைசன் நடிக்கிறார்.
அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார்.கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
“முதல் முறையாக, குத்துச்சண்டை மேடையின் ராஜா இந்திய சினிமாவின் பெரிய திரைகளில் தோன்றவுள்ளார். மைக் டைசனை லைகர் குழுவுக்கு வரவேற்கிறேன்” என்று கரண் ஜோஹர் ட்வீட் செய்துள்ளார்.