சென்னை
சென்னை அண்ணாசாலையில் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை பணிகளை அமைச்சர் எ வ வேலு ஆய்வு செய்துள்ளார்/
சென்னையில்,சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் பொருட்டு, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, உயர்மட்ட நான்கு வழித்தட சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு உட்பட ஏழு முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் 3.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு, ரூ.621 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடைபெற்று வருகின்றது
அதிகாரிகளுடன் இந்த பணிகள் தொடர்பாக கலந்து ஆலோசித்து, திட்டமிட்ட இலக்கின்படி பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்தகாரருக்கும் அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.