நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் செயலிழப்பால் விமானங்கள் தரையிறங்குகின்றன என தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி விமானங்கள் திடீரென தரையிறங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான காரணம், கிளவுட்சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் ‘Blue Screen of Death’ Error ஏற்பட்டுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தொழில்நுட்பம், மீடியா, ஏர்லைன்ஸ், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் Windows மென்பொருள் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் கிளவுட் செர்வரில் இயங்கி வரும் நிலையில், அவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ரஷியாவில் அவசரமாக தரையிறக்கபட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற கோளாறுகளுக்கு கிளவுட் தொழில்நுட்ப செயலிழப்பு காரணம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் பரபரப்பு தகவல்களை வெளிட்டு உள்ளது. விமான சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை வழங்கியுள்ள, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வியாழனன் அதன் மத்திய அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள கிளவுட் சேவைகளில் உள்ள சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாற காரணமாக, இது பல விமானங்களை தரையிறக்குவதற்கும் ரத்து செய்வதற்கும் காரணமாக இருந்தது என குறிப்பிட்டு உள்ளது. செயலிழப்பு குறித்த கூடுதல் விவரங்களை கேட்ட தங்களது கோரிக்கைக்கு மைக்ரோசாப்ட் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, Frontier Group Holdings, Allegiant மற்றும் Sun Country ஆகியவற்றின் பிரிவான ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் , தங்களது செயல்பாடுகளை இந்த கிளவுட் தொழில் நுட்பம் பாதித்துள்ளது. கிளவுட் செயலிழந்துள்ளது என அறிவித்து உள்ளது.
மேலும், இது :பெரிய மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப செயலிழப்பு” என்றும், அதின் செயல்பாடுகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபிரான்டியர் தெரிவித்துள்ளது. மேலும், மூன்றாம் தரப்புவிற்பனையாளரான SunCountry , விமான முன்பதிவு மற்றும் செக்-இன் வசதிகள் பாதிக்கப்பட் இருப்பதாக, மைக்ரோ சாஃபட் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்து ள்ளது.
“மைக்ரோசாஃப்ட் அஸூர் பிரச்சினை காரணமாக அலெஜியன்ட் இணையதளம் தற்போது கிடைக்கவில்லை” என்று நெவாடாவை தளமாகக் கொண்ட அலெஜியன்ட் CNN க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
FlightAware தரவு கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, ஃபிரான்டியர் வியாழக்கிழமை 147 விமானங்களை ரத்து செய்தது மற்றும் 212 விமானங்களை தாமதப்படுத்தியது. 45% அலெஜியன்ட் விமானங்கள் தாமதமானதாகவும், சன் கன்ட்ரி 23% விமானங்களை தாமதப்படுத்தியதாகவும் தரவு காட்டுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு மைக்ரோசாஃப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் சேவைகளைப் பாதிக்கும் சிக்கலை ஆராய்ந்து வருவதாக தெரிவித்து உள்ளது.
அஸூர் என்பது கிளவுட் கம்ப்யூட்டிங் தளமாகும், இது பயன்பாடுகள் மற்றும் சேவைகளை உருவாக்க, வரிசைப்படுத்த மற்றும் நிர்வகிப்பதற்கான சேவைகளை வழங்குகிறது. தனித்தனியாக, மைக்ரோசாப்ட் பல்வேறு மைக்ரோசாஃப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் சேவைகளைப் பாதிக்கும் சிக்கலை ஆராய்ந்து வருவதாகக் கூறியது. மைக்ரோசாப்ட் அதன் செயலிழப்பு வியாழன் மாலை 6 மணிக்கு தொடங்கியதாகவும், இதனால், அதன் வாடிக்கையாளர்களின் துணைக்குழு மத்திய அமெரிக்க பிராந்தியத்தில் பல அஸூர் சேவைகளில் சிக்கல்களை எதிர்கொள்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
CrowdStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. அமெரிக்காவின் 911, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பல முக்கிய தளங்கள் முடங்கியிருக்கின்றன. ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளின் விமான சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. விண்டோஸ் முடங்கியதால் பல நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் சென்னை, டெல்லி, மும்பை உட்பட உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
தொழில்நுட்பம், பொருளாதாரம், தொலைத்தொடர்பு சேவைகள், செய்தி நிறுவனங்கள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் Blue Screen Error ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்து உள்ளது.
கிளவுட் தொழில்நுட்பம் என்றால் என்ன?
இணையம் வழியாக தரவு சேமிப்பு, பாதுகாப்பு, நெட்வொர்க்கிங், மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் வணிக நுண்ணறிவு போன்ற சேவைகளை சந்தா அடிப்படையில் கிளவுட் கம்ப்யூட்டிங் வழங்குகிறது. இன்றைய காலக்கட்டத்தில்அனைத்து துறைகளிலும் கிளவுட் தொழில்நுட்பம் விரிந்துள்ளது.
அதன் அடிப்படையிலேயே இன்றைய இளைய தலைமுறையினர் இணையதளங்களை இயக்கிவருகின்றனர். தனிப்பட்ட மொபைல் பயன்பாடுகள், Facebook மற்றும் Google டாக்ஸ் உள்பட சமூக வலைதளங்களில் பணியாற்றும் வகையில் பழகிவிட்டனர், இந்த தொழில்நுட்பம் காரணமாக ஒருவர் எங்கும், எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் மற்றும் வேலை செய்யலாம்.
மேலும் இதன் காரணமாக, தரவு சேமிப்பு, தகவல் அணுகல், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை “மேகக்கணிக்கு நகர்த்துவதற்கு” எந்தவொரு வணிகத்திற்கும் இன்றியமையாதவையாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்றும், எங்கிருந்தும் 24×7 கிளவுட் சிஸ்டம் அணுகலைப் பெற முடியும் வகையில் செயல்பட்டு வருகிறது.
சமீபகாலமாக, அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் தரையிறங்குவதற்க மைக்ரோசாப்டின் அசூர் கிளவுட் தளம் காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான விமர்சனங்களும் எழுந்துள்ளன. ந்த . இந்த இணைதளம் குறித்து ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இங்கே தரப்பட்டுள்ளது.