பெங்களூரு: மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைக்ரோசாப்ட் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாகும். அதாவது ஐதராபாத் தான் அமெரிக்காவிற்கு வெளியே மைக்ரோசாப்டின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக கணிக்கப்படும் நகரமாகும்.

இந் நிலையில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா பிப்ரவரி 24 முதல் 26 வரை இந்தியாவில் இருக்க திட்டமிட்டுள்ளார். மேலும் டெல்லி, தொழில்நுட்ப நகரமான பெங்களூரு மற்றும் பகுதிகளுக்கு வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனது வருகையின் போது இந்திய தொழில்துறை மூத்த தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால், அதற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

இது குறித்து கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் மறுத்துவிட்டது. இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள எங்களிடம் எதுவும் இல்லை என்று ஒரு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறி இருக்கிறார்.

இந்த சந்திப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும், மைக்ரோ சாப்ட் நிறுவனமானது பிரதமர் மோடியை சந்திக்க நாதெல்லாவிற்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறது. ஆனால் பிரதமர் அலுவலகம் சாதகமான பதிலை தரவில்லை என்று தெரிகிறது.