வாஷிங்டன்:
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இளைய மகன் ப்ளாங்கெட் ஜாக்சன், சமீபத்தில் இரண்டு மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்தியில், கலிபோர்னியாவின் கலாபாசஸின் ஆடம்பரமான இடத்தில் புதிய வீட்டை வாங்கியுள்ளார். 6,382 சதுர அடியில் இருக்கும் அந்த வீட்டில் மொத்தம் ஆறு படுக்கையறைகள் மற்றும் ஏழு குளியலறைகள் உள்ளன.
இளைய ஜாக்சனின் குடியிருப்பு அவரது பாட்டி கேத்ரின் ஜாக்சனின் வீடு இந்த மாளிகையில் ஒரு நீச்சல் குளம், கொல்லைப்புறம், வெளிப்புற சமையலறை மற்றும் மூடப்பட்ட கார் பார்க்கிங்கும் உள்ளது.
[youtube-feed feed=1]