தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது .

இதில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் என பாண்டவர் அணி ஒருபுறமும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது. இதைத் தொடர்ந்து காலை முதல் நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் என பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், 80களில் பல வெற்றிப்படங்களை தந்த மைக் மோகன் இன்று காலை வாக்களிக்க வந்தார். ஆனால், அவரது வாக்கை யாரோ ஏற்கனவே போட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது. எனவே, அவர் வாக்களிக்காமல் திரும்பி சென்றார்.

கடந்த முறை தேர்தல் நடைபெற்ற போதும் அவரது வாக்கை யாரோ கள்ள ஓட்டு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.