மும்பை

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியை வென்றதன் மூலம் மும்பை அணி 3ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது/

ஐபிஎல் போட்டிகளில் நேற்றைய் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன் அணிகள் மோதின,  போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணிந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணிக்கு தொடக்கம் கொடுக்கும் ரோஹித் சர்மா முதல் ஓவரில் அவுட்டாகி வழக்கமாக வெளியேறுவார். அனால் தற்போது ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னுடன் முதல் ஓவரில் விக்கெட்டானார். தொடர்ந்து அனுஜ் ராவத் 6 ரன்களுடன் கிளம்பினார். அதற்கு பிறகு த ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் க்ளான் மேக்ஸ்வெல் இணை மும்பை பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர்.

இதனால் 12 ஓவர் வரை இந்த இணையை பிரிக்க முடியாமல் மும்பை திக்குமுக்காடியது. பிறகு ஒருவழியாக போராடி 4 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 68 ரன்களை குவித்த மேக்வெல்லை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அவுட்டாக்கினார்.  மஹிபால் லோமரோர் 1 ரன்னில் போல்டாக, டு பிளெசிஸூம் 65 ரன்களுடன் கிளம்பினார்.   இறுதியாக 17 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை சேர்த்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கும், கேதர் ஜாதவ்வும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தினேஷ் கார்த்திக் சிக்சர் விளாசி நம்பிக்கையூட்டினாலும் 30 ரன்களில் அவசரப்பட்டு கிளம்பினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 199 ரன்களை குவித்துள்ளது.

போட்டியில் மும்பை அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோடன், குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பிறகு 200 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா வழக்கம் போல் ஏமாற்ற துவக்கம் கொடுத்தாலும் மற்றொரு முனையில் இருந்த இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்., இவர் 20 பந்துகளில் தலா 4 பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசி 42 ரன்கள் சேர்த்துவிட்டு, 21 பந்தில் பவர் பிளே முடிவதற்குள்ளாகவே அவுட் ஆனார்.  மும்பை அணியின் முதல் விக்கெட்டாக இஷான் கிஷன் வெளியேறிய சில மணித்துளிகளில் 7 ரன்களில் ரோகித் ஷர்மாவும் நடையைக் கட்டினார். இந்த இருவரது விக்கெட்டையும் வனிந்து ஹஸரங்கா வீழ்த்தினார்.   இதற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் சூடுபிடித்தது. பிற்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா இணைந்து ஆர்சிபி பவுலிங்கை கலங்கடித்தனர்.

இவர்கள் இருவரும் போட்டிபோட்டு கொண்டு பந்தை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட்டனர். இதனால், மும்பை அணி விரைவாகவே ரன்களை குவித்தது.  ஒரு கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் மரண அடி அடித்து 26 பந்துகளில் அரைசதம் தொட்டு மேட்சை சீக்கிரமாக முடிக்கும் முயற்சியில் பந்துகளை சிக்ஸராக பறக்கவிட்டார்.  விஜயகுமார் வைசாக் வீசிய 16வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து அதிரடி காட்டிய சூர்யா அதே ஓவரில் கேட்ச் ஆனார். 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார் அவர். இதில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடக்கம். இதன்பின் மும்பை வெற்றிபெற 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.   இறுதியில் ஒரு சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதிசெய்தார் நேஹல் வதேரா. இறுதிவரை அவர் அவுட் ஆகாமல் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

போட்டியில் 3.3 ஓவர்கள் மீதமிருக்க, 4 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் இலக்கை எட்டி வெற்றிபெற்றது மும்பை. பெங்களூரு தரப்பில் ஹஸரங்கா மற்றும் விஜயகுமார் வைசாக் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.  தற்போதைய தொடரில் மும்பை பெறும் 6வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்துக்கு மும்பை முன்னேறியுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி அடைந்துள்ளது அந்த அணி.