டில்லி

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை நடக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. அதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முகாம்களுக்கான விதிமுறைகள் பற்றி தலைமை தேர்தல் ஆணையர் ஏற்கனவே அறிவிட்துளார். அத்துடன் வாக்கு என்ணிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், “நாட்டின் பல பகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு சட்டம் மற்றும் ஒழுங்கு, அமைதி, மக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதைப் போலவே வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், வாக்கு எண்ணிக்கை முகாம்கள் அமைந்துள்ள இடங்ளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று வன்முறை வெடிக்கலாம் என பல தரப்பிலிருந்தும் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.