டில்லி

யோத்தி ராமர் கோவில் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதால் கண்காணிப்பைப் பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் வரும் 13 ஆம் தேதி அன்று அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில உரிமை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஏனெனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வ்ரும் 17 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.  எனவே இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே முடிவடைந்துள்ளதால் அவர் ஓய்வு பெறும் முன்பு தீர்ப்பு வழங்குவார் எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி அயோத்தி நகரில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக ராம் ஜென்ம பூமி, உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மட்டுமே காணப்படுகின்றனர்.   ஏற்கனவே உள்ள காவலர்களைத் தவிர மேலும் 4000 காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.    இந்த விவகாரம் குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது எனப் பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று  மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.   அத்துடன் அந்த சுற்றறிக்கையில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.