மெக்சிகோ

கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க எல்லை தாண்டி மெக்சிகோவுக்குள் பலர் நுழைகின்றனர்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் 65000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.  அமெரிக்காவின் எல்லை நாடான மெக்சிகோவில் 500க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அமெரிக்கர்கள் பலரும் எல்லை தாண்டி மெக்சிகோவுக்குச் செல்கின்றனர்.  அமெரிக்க மெக்சிகோ எல்லை மூடப்பட்டுள்ளது.  அத்தியாவசியமாக  செல்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.  ஆனால் அதையும் மீறி பலர் மெக்சிகோவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பல சுகாதார ஆர்வலர்கள் இதை எதிர்த்து வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து வருபவர்களால் மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.

அதையொட்டி அவர்கள் ”மெக்சிகோவுக்குள் யாரும் நுழைய வேண்டாம், அமெரிக்காவிலேயே இருக்கவும்” என்னும் எச்சரிக்கை  பதாகைகளை எல்லையில் வைத்துள்ளனர்.