சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக திகழும் மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக விரைவில் நிரப்ப உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டி உள்ள நிலையில், அணையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக  மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்துகொண்டிருக் கிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் நீர் வந்துகொண்டிருப்பதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில்,  தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், , 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 115.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இதே நிலையில் நீடித்தால்,  இன்னும் ஒரு வாரத்தில்  அணை  முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து,  மேட்டூர் அணையை திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் தலைமயில், ர்வளத் துறையின் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன்  அதிகாரிகள்  ஆய்வு செய்தனர்,.அணையின் வலது மற்றும் இடது கரை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சுரங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர், அணையின்  வலது கரையிலும், இடது கரையிலும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், உபரி நீரை திறக்க தயார் நிலையில் குழுக்களை நிறுத்தவும் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் மேட்டூர் அணை கண்காணிக்கப்பட்டு வருகிறது.