சேலம்:
மேட்டூர் அணை நீர்மட்டம் 109.5 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 109.5 அடியாக உயர்ந்துள்ளது.