சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 188 அடியாக இருந்த நிலையில், இன்று 119அடியை நெருங்கி உள்ளது. இதனால்,  அணை ஒரிரு நாளில் முழு கொள்ளவான 120 அடியை எட்டும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணாக, நடப்பாண்டு மேட்டூர் அணை 3வது முறையாக  முழு கொள்ளவை எட்டி சாதனை படைக்க உள்ளது.


தமிழகத்தில் பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதுபோல, , காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.  டெல்டா  மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால், பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரும் குறைந்துள்ளது.  இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 7,460 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 7,148 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 7,368 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.53 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 91.54 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இதனால் அணை ஒரிரு நாளில் முழு கொள்ளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல,  மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதால்,   கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. 

தற்கிடையில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கும் கர்நாடக அணைகளும் நிரம்பி உள்ளன.   கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி  அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது.