மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்துக் கொண்டு சாலை திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசினார்.

அவர் லஞ்சத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தியின் வழியைப் பின்பற்றுங்கள் என அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
துவக்கப் பள்ளிக்கு அனுமதி வாங்கிவிட்டு, உயர்நிலை வகுப்புகள் நடைபெற்றுவரும் பள்ளிகள் குறித்தும் அதன் பின்னனியில் உள்ள அரசியல்வாதிகள் குறித்தும் கலந்தாலோசிக்கையில் மேனகா காந்தி இவ்வாறு கூறினார்.
தன்னுடைய லோக்சபா தொகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு, ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். சோனியா காந்தியின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தி அவர் புதிதாகத் திறந்த கடைக்கு மக்களை வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை அறிந்த சோனியா காந்தி, நாளிதழில் அவரது கடைக்கு யாரும் செல்ல வேண்டாம் என விளம்பரம் கொடுத்தார்.
நீங்களும், இதுபோல் செயல்பட்டு ஊழல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுங்கள், கல்வித் துறையில் ஊழலை ஒழியுங்கள் என ஆலோசனைக் கூறினார்.
பா.ஜ.க. வின் மத்திய மந்திரி, எதிர்க்கட்சித் தலைவியின் நேர்மை குறித்துப் பாராட்டியும் அவரின் செயலை உதாரணமாய் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மறுநாள் அவர் விழிப்புணர்வு உறுப்பினர்களுடன் சேர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துக் கொண்டார். பிலிபித்தில் நடைப்பெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு ஞாயிற்றுக் கிழமை தில்லி திரும்பினார்.
Patrikai.com official YouTube Channel