டெல்லி: வேளாண் போராட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 125 நாட்களை கடந்த நிலையில், உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவிடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக நாடு முழுவதும் இருந்து மண் சேகரிக்கப்படுடு டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் கடும் பனியையும், குளிரையும் தாண்டி 100 நாட்களை கடந்துள்ளது. இதற்கிடையில், கடும் குளிர் மற்றும் உடல்நலப்பாதிப்பு மற்றும் தற்கொலை போன்ற ஏராளமான விவசாயிகள் மரணத்தை தழுவி உள்ளனர். இதுவரை 350 விவசாயிகள் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.
உயிர் நீத்த விவசாய தியாகிகள் நினைவாக , டெல்லி சங்கு பார்டரில் நினைவிடம் அமைக்கப்பட விவசாய சங்கத்தின் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது..அந்த வகையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண், ரயில் மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.