ட்ரம்பின் மனைவி மெலனியாவை பாலியல் தொழிலாளி என எழுதியதற்காக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் என்ற பத்திரிகை, அதற்காக தற்போது இழப்பீடு வழங்கி உள்ளது.
அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக ட்ரம்பின் மனைவி மெலானியா முன்னாள் பாலியல் தொழிலாளி யாக இருந்தவர் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த செய்தியை பின்னர் திரும்பப் பெற்று கொண்டது .
எனினும், தம்மைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் பத்திரிகை அதற்கான இழப்பீடாக 150 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனக் கோரி, மெலனியா லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில், மெலனியா கோரிய இழப்பீடை வழங்க பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி தாங்கள் வெளியிட்ட செய்திக்காக மன்னிப்புக்கோரிய டெய்லி மெய்ல் பத்திரிகை நிறுவனம், அதற்கான இழப்பீடையும் வழங்கியது.
நீதிமன்றத்திலேயே மெலனியா அந்த இழப்பீடை பெற்றுக் கொண்டார். ட்ரம்பின் மனைவியாச்சே… விடுவாரா சும்மா…!