சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு  எதிராக தனிநபர் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறார்.

காவிரியின் குறுக்கே  மேகதாது பகுதியில்  அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. தற்போது அதற்கான ஆயத்த பணிகளை மேற்கண்டு வருகிறத. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை,  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

மேகதாது அணை கட்ட  தமிழக அரசு உள்பட காவிரி ஆணையத்தில் இடம்பெற்றுள்ள மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. மேகதாகஅணை கட்ட வலியுறுத்தி அம்மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் தலைமையில் நடைபயணம், உண்ணாவிரதம் என பல்வேறு போராபட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மாநில அரசும் அணை கட்ட முயற்சித்து வருகிறது.

கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழகஅரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பா பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானம் தாக்கல் செய்து, தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகிறார். இந்த தீர்மானத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என தெரிகிறது.