ஸ்ரீநகர்

செய்தி தொலைக்காட்சி ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே போன்றவை அளிக்கும் தகவல்களால் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று சுற்றுலாத் துறை ஆகும்.    சமீப காலமாக காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சி இன்றி காணப்படுகிறது.   சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால்  அதை ஊக்குவிக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.    சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது குறித்து  இந்திய டிராவல் ஏஜண்டுகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி ஒரு கலந்துரியாடல் நிகழ்த்தினார்.

அப்போது அவர், “தற்போது காஷ்மீர் பிரதேசத்தில் மிகவும் கடினமான சூழ்நிலை நிலவி வருவது என்பதில் சிறிதும் ஐயமில்லை.    இந்த நேரத்தில் நீங்கள் எங்களுகு கை கொடுக்க வந்ததற்கு மிகவும் நன்றி.    ஆனால் காஷ்மீர் மாநிலத்தை ஒரு பயங்கரவாதம் மிகுந்த மாநிலமாக தொலைக்காட்சிகள் சித்தரிக்கின்றன.    இதனால் தான் சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த மாநிலத்தில் குறைந்து விட்டது.

உலகம் முழுவதும் எங்காவது ஓரிரு இடங்களில் பயங்கர வாத தாக்குதல்கள் நிகழ்ந்துக் கொண்டு உள்ளன.    ஆனால் நமது தொலைக்காட்சி ஊடகங்களான டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே உள்ளிட்டவைகள் ஏதாவது ஒரு இடத்தில் சிறுகலவரம் நிகழ்ந்தாலும் காஷ்மீர் மாநிலமே பற்றி எரிவது போல செய்திகள் வெளியிடுகின்றன.

எனது தந்தையார் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் முக்கியம் என்பதைப் போல ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலா முக்க்யம் என கூறிவார்.   ஆனால் அத்தகைய சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு எதிராக நமது நாட்டு செய்தி தொலைக்காட்சிகள் இருப்பது மிகவும் துரதிருஷ்ட வசமானது.    செய்திகளை வெளியிடும் போது சிறிது கவனத்துடன் இந்த சேனல்கள் வெளியிட வேண்டும்”  என கூறினார்.