டில்லி: காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியுடன் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதுடன், அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறைகளிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெபூபா முப்தி நேற்று திடீரென டெல்லி வந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரரு அக்பர் ரோடு இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரு சுமார் அரை மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலவரம், காஷ்மீர் நிலவரம் மற்றும், 2024 பாராளுமன்ற லோக்சபா தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
மெகாபூதா ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், விரைவில், காங்கிரஸ் கூட்டணியில் இணைய இந்த சந்திப்பு முன்னோட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.