ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி, மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதையடுத்து, நீண்ட நாட்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட மெஹ்பூபா முப்தி, சமீபத்தில்தான் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் வஹீத் பாரா, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிடம் ஆதரவு கோரிய குற்றச்சாட்டில், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் குடும்பத்தினரை சந்திக்க, மெஹபூபா முப்தி திட்டமிட்டிருந்தார். அதற்கு, அனுமதி மறுக்கப்பட்டது.அதை மீறி, மெஹ்பூபா முப்தி, நேற்று செல்ல முயன்றதால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். மேலும், மெஹபூபாவின் மகள் இல்டிஜா முப்தியும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், செய்தியாளர்களை சந்திக்க முயன்ற மெஹ்பூபா முப்தியின் முயற்சி, ஜம்மு காஷ்மீர் அரசால் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.