ஜம்மு :
ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி அளித்துள்ள பேட்டியில், “நிஜமான பிர்ச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் தான் பா.ஜ.க. மத அரசியல் செய்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
“எங்களை பார்த்து ஊழல் வாதிகள் என்று சொல்லும் பா.ஜ.க., ஊழலில் இதற்கு முந்தைய ‘ரிகார்டுகளை’ எல்லாம் உடைத்து சாதனை புரிந்துள்ளது” என அவர் ஏளனம் செய்தார்.
“இன்று பா.ஜ.கவின் நாளாக இருக்கலாம். ஆனால் நாளை எங்கள் நாள். எங்களுக்கும் காலம் வரும். இன்றைக்கு அமெரிக்காவில் ட்ரம்புக்கு ஏற்பட்ட அதே கதி நாளை பா.ஜ.க.வுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்” என மெஹ்பூபா சாடினார்.
“ஆட்சியில் இருந்து இறங்கும் முன்பாக நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் விற்று விட்டுத்தான் பா.ஜ.க. செல்லும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
– பா. பாரதி