ஷில்லாங்:
மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மேகாலயா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேகாலயாவில் என்பிபி எனப்படும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு பாஜக, உள்பட ஒருசில கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த என்பிபி கட்சியின் தலைவராகவும், மாநில முதல்வராகவும் கன்ராட் சங்மா இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டவிரோதமாக வட கிழக்கு மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாத வர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்கிட குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தது.
இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மேகலாயாவிற்குள் குடியேறிய இந்துகள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின்கள், பார்சியர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுிரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்திற்கு மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா கடும் எதிர்ப்ப தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லி சென்று மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த இருப்பதாக கூறி உள்ளார்.
மாநில முதல்வரின் முடிவுக்கு ஆதரவு கட்சியான பாஜக, தனது ஆதரவை விலக்கி கொள்வதாக மிரட்டி உள்ளது.